பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பரத் எம்மகன் படத்தின் மூலம் அப்பாவி கிராமத்து இளைஞனாக காதல் ஹீரோவாக கண்களை கவர்ந்தார். அதன் பின் படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு பெரிதளவில் அப்படங்கள் கைகொடுக்கவில்லை.
நீண்ட நாட்களாக ஒரு நல்ல ஹிட் கொடுக்க காத்திருந்தார். அவ்வகையில் அவருக்கு கடந்த வருடம் வெளியான காளிதாஸ் அதிரடி படம் பெரும் வரவேற்பை பெற்றது. போலிஸாக பரத் இதில் நடித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்தாக நடுவன் என்ற படத்தில் நடித்திருக்கிறாராம். மிரட்டலான கொலைகாரனாக அவர் நடித்துள்ளார். அபர்ணா வினோத் அவருக்கு ஜோடியாக நடிக்க சென்னை டூ சிங்கப்பூர் கோகுல், குரு, அருவி பாலா, சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஷரங்க் இயக்கியுள்ள இந்த நடுவன் படத்தின் மிரட்டலான ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.