பெரும் சாதனை செய்த பிரபல நடிகரின் பாடல்!

சமீபகால வருடங்கள் Youtube மீதான மோகம் உலகளவில் அதிகரித்துள்ளது. அதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் பலமடங்காக அதிகரித்து வருகிறது.

சினிமா பாடல்கள், படங்கள், டிரைலர்கள், படம் சார்ந்த வீடியோக்கள் என Youtube ல் பட விளம்பரத்திற்காக படக்குழுவினரால் வெளியிட்டப்பட்டு வருவது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அவ்வகையில் கடந்த சில மாதங்களாக தெலுங்கு ஹிட்டான ஒரு பாடல் என்றால் அது Butta Bomma பாடல் தான். பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான அல வைகுந்தபுரமுலு படத்தின் பாடல் இதுவென்று கூறலாம்.

இதில் கிரிக்கெட் பிரபலங்கள், மற்ற சினிமா பிரபலங்கள் என சிலர் டிக் டாக்கில் நடனமாடி வீடியோவும் வெளியிட்டனர். இந்நிலையில் Youtube ல் இப்பாடல் 200 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

மேலும் இதுவரை உச்சத்தில் இருந்த நடிகரின் வெங்கடேஷ் Fidaa படத்தின் பாடலை முந்தி Butta Bomma most viewed song in Telugu என்ற சிறப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.