ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவிற்கு கொரோனா…!

பிரபல நடிகரான அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

இதுபற்றி இன்று காலை மும்பை நானாவதி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமிதாப்பச்சனுக்கு லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. அவரது உடல் நிலை சீராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் இதன் மாதிரிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் தாய் மற்றும் மகள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தததையடுத்து, பிரபலங்கள் தங்களது ஆறுதலை சமூகவலைதளங்களில் கூறி வருகின்றனர்.