சில நாட்களுக்கு முன் நபர் ஒருவர் சுமார் 3 லட்சத்திலான தங்க மாஸ்க் ஒன்றை அணிந்து சமூக வலைத்தளங்களில் வைரலானநிலையில் தற்போது 4 லட்சத்தில் வைர மாஸ்க் ஒன்று வைரலாகிவருகிறது.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், கொரோனாவில் இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வழிமுறைகளை பின்பற்றுமாறு உலக சுகாதார நிறுவனமும், அரசும் தெரிவித்துவருகிறது.
மக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என வலியுறுத்தப்படும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் புனேயில் உள்ள தொழிலதிபர் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்து வலம் வந்தபுகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான வைர மாஸ்க் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மாஸ்க்கை தயாரித்த நகைக்கடைக்காரர் கூறும்போது, வைர கற்கள் பதித்த மாஸ்க் ஒன்று வேண்டும் என தங்களது வாடிக்கையாளர் ஒருவர் கேட்டதாகவும், அவருக்கு விரைவில் திருமணம் வர இருக்கும் நிலையில், திருமணத்தில் அணிந்துகொள்ள இந்த மாஸ்க்கை ஆர்டர் செய்ததாகவும் கூறியுள்ளார்.
தங்கமும் வைரமும் கலந்த இந்த மாஸ்க்கின் விலை ரூபாய் 4 லட்சம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.