25 ஆண்டுகளாக டீக்கடை நடத்தும் ஏழையின் மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

டீக்கடை நடத்துபவரின் மகள் ஒருவர் தற்போது இந்திய விமானப்படையில் ஃப்ளையிங் அதிகாரியாக பதவி ஏற்றுள்ளார்.

இவர் கடந்து வந்த பாதைகள் அவ்வளவு எழிது கிடையாது. ஒருவரது வாழ்வில் சந்திக்கும் தடைகள் அவரது கனவுகளை அடைய தடையாக இருக்கக்கூடாது என்பதற்கு இவரின் கதை ஒரு உதாரணம்.

டீ விற்பனையாளரின் மகளான 24 வயது அன்சல் கங்வால் தனது படிப்புக்கு ஃபீஸ் கட்ட பலமுறை பணமின்றி தவித்துள்ளார்.

என் மகள் விமானப்படையில் இணைந்துள்ளது பெருமைமிக்க தருணமாகும். ஆனால் அவர் பதவி ஏற்பதை எங்களால் பார்க்கமுடியவில்லை. லாக்டவுன் காரணமாக துண்டிகள் விமானப் படை மையத்திற்கு எங்களால் செல்லமுடியவில்லை,” என்று அன்சலின் தந்தை சுரேஷ் கங்க்வால் கவலை வெளியிட்டுள்ளார்.

சுரேஷ், மத்திய பிரதேசம் நீமுச் மாவட்ட பேருந்து நிலையத்தில் டீ விற்பனை செய்கிறார்.

அவரின் மகள் சிறு வயது முதலே இந்திய விமானப்படையில் சேர விரும்பியுள்ளார். அவருக்கும், அவரின் குடும்பத்துக்கும் அவளின் கனவை நினைவாக்குவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

ஆனால் அன்சல் தன் முடிவில் திடமாக இருந்தார். அன்சல் படிப்பிலும், பாஸ்கெட்பால் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார்.

கேதார்நாத்தில் நடந்த வெள்ளப்பாதிப்பின் போது இந்திய விமானப்படையின் வீரச்செயலை பார்த்த அன்சல் அப்போதே விமானப்படையில் சேர முடிவெடுத்துள்ளார்.

அன்சல் ஐஏஎஃப்-ல் சேர, புத்தகக்கடைகளில் அதற்கான புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். தீவிரமாக தேர்வுக்கு தயாரானார்.

தொடர்ந்து முயற்சித்து, 6வது முறை வெற்றியை ஈட்டியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக டீக்கடை நடத்தும் சுரேஷ், நிதிப் பிரச்சனையால் பலமுறை தவித்துள்ளார்.

அன்சலில் பள்ளி மற்றும் கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியாமல் கடன் வாங்கியுள்ளார். தற்போது அன்சலில் இந்த வெற்றியை பார்த்து, மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர், ஷிவ்ராஜ் சிங் செளஹான் பாராட்டியுள்ளார்.

சாதரண குடும்பத்தில் இருந்து வந்த அன்சல் இன்று இந்திய விமானப்படையின் விமானத்தில் உயரப் பறக்கவிருக்கிறார். நாட்டின் பெருமையையும் உயரப்பறக்க வைப்பார் என்பது உறுதியே.