கொரோனா நோய் தொற்றால் சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வரும் செய்தி அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே அமீர் கான், சல்மான் கான், நடிகை ரேகா போன்றவர்களின் வீட்டு காவலாளிகளுக்கும், பணியாளர்களுக்கும் தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஷாருக்கானுடன் ஜீரோ படத்திலும், ஐஸ்வர்யா ராய் உடன் Sarbjit படத்திலும் டிவி நிகழ்ச்சிகளிலும் நிறைய பங்கேற்றுள்ள நடிகர் Ranjan Sehgal உடல் உறுப்புகள் செயல் இழப்பால் நேற்று சனிக்கிழமை ஜூலை 11 ல் சண்டிகரில் இறந்துள்ளார். அவருக்கு வயது 36.
அவர் கடந்த 2014 ல் ஆடை வடிவமைப்பாளர் நிவ்யா சப்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.