தமிழ் சினிமாவின் தல என்று கொண்டாடப்படுபவர் அஜித். இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் திரைக்கு வந்தது.
இதில் இந்த இரண்டும் மெகா ஹிட் ஆனது, இதனால் அஜித் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இதே நாளில் 8 வருடங்களுக்கு முன்பு தான் பில்லா 2 படம் திரைக்கு வந்தது.
இந்த படம் அஜித் திரைப்பயணத்தில் தோல்வி படம் என்றாலும், பல ரசிகர்களுக்கு இந்த படம் பேவரட் தான்.
அதிலும் இந்த படத்தில் வசனங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு செம்ம பேவரட், படத்தின் இரண்டாம் பாதி மட்டும் கொஞ்சம் சொதப்பியது.
அப்படியிருந்தும் அஜித் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் என்றால் பில்லா 2 தான், இப்படம் கிட்டத்தட்ட ரஜினி படத்திற்கு இணையான ஓப்பனிங்.
ஆம், பில்லா 2 தமிழகத்தில் மட்டுமே ரூ 9.5 கோடிகள் வரை முதல் நாள் வசூல் செய்தது.
இப்படியான வசூல் அந்த நேரத்தில் எந்திரன் படம் மட்டுமே வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சென்னை மாயஜால் காம்ப்ளெக்ஸ் தியேட்டரில் முதல் நாள் 100 காட்சிகளுக்கு மேல் அப்போதே திரையிட்டது குறிப்பிடத்தக்கது.