விரைவில் அறிமுகமாகின்றது Oppo A72 5G ஸ்மார்ட் கைப்பேசி

சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான Oppo தனது புத்தம் புதிய 5G கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் Oppo A72 5G எனும் குறித்த கைப்பேசி தொடர்பான சில சிறப்பம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி குறித்த கைப்பேசியானது 6.5 அங்குல அளவு, 2400 x 1080 Pixel Resolution உடைய Full HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் MediaTek MT6853V Processor தரப்பட்டுள்ளதுடன், பிரதான நினைவகம் மற்றும் சேமிப்பு நினைவகம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

தவிர 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 16 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய மூன்று பிரதான கமெராக்களும் தரப்பட்டுள்ளன.

இவற்றுடன் 18W அதிவேக சார்ஜ் தொழில்நுட்பத்துடன் கூடிய 4040mAh மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது.