தியாகராஜா குமரராஜாவின் அடுத்தப்படம் இதுவா..!!

ஆரண்ய காண்டம் எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார் தியாகராஜா குமாரராஜா.

இப்படம் அப்போதைய காலகட்டத்தில் பெரிதளவில் ஓடவில்லை என்றாலும் தற்போது உள்ள ரசிகர் பட்டாளம் இப்படத்தை மாபெரும் அளவில் மதித்து வருகின்றனர்.

இதன்பின் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து சூப்பர் டீலக்ஸ் எனும் படத்தை இயக்கி வெளியிட்டார் தியாகராஜா குமாரராஜா.

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் என பலரும் நடித்திருந்தனர்.

இப்படம் வசூல் ரீதியாக பெரிதளவில் போகவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைய போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

ஆம் பகத் பாசில் கூட இந்த கூட்டணிக்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். இதனால் கண்டிப்பாக இந்த சூப்பர் டீலக்ஸ் கூட்டணி மீண்டும் அமைவதற்கு பெரும் வாய்ப்புகள் இருக்கின்றன.