வெள்ளிக் கிழமைகளில் மறந்தும் இதையெல்லாம் செய்திடாதீங்க…!!

சிலர் வெள்ளிக் கிழமைகளில் கடன் கொடுக்கக் கூடாது என்று கூறுவார்கள். அது ஏன்? அந்த நாளில் என்ன செய்தால் வீட்டில் செல்வத்தை அதிகரிக்கலாம் என்று பார்ப்போம்.

வெள்ளி கிழமையில் பணம் கொடுக்க கூடாது ஏன்?
  • செவ்வாய்கிழமை முருகனுக்கும், வெள்ளிக்கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.
  • நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள் புரிகிறார்கள்.
  • இந்த காரணத்தினால் தான் அன்றைய தினம் பணப் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதையும், மற்றவர்களுக்கு கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
  • இல்லையெனில், நம்மிடம் இருக்கு அனைத்து செல்வ வளங்களும் நம்மை விட்டு சென்று விடும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது.
வெள்ளி கிழமையில் செய்ய வேண்டியவை என்ன?
  • செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
  • பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4- 5 மணி நேரத்தில் படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.
  • நமது வீட்டில் செல்வம் எப்போதும் நிலைத்து இருக்க, வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
  • வீட்டில் செல்வத்தை அதிகரிக்க சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம் மற்றும் ஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் ஆகியவற்றை வீட்டில் வைத்திருக்க வேண்டும்.
செய்யக் கூடாதவை என்ன?
  • ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்காமல், இருவரும் வாசல் படிக்கு உள்ளே அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.
  • குத்து விளக்கை தானாக அணைய விடக் கூடாது, ஊதியும் அணைக்கக் கூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.
  • நம் வீட்டில் உள்ள வாசற்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் ஆகியவைகளில் உட்காரக் கூடாது.
  • வீட்டை இரவில் பெருகும் போது, அந்த குப்பைகளை வெளியே கொட்டக் கூடாது.
  • வீட்டில் விளக்கு ஏற்றிய பின் பால், தயிர், உப்பு, ஊசி ஆகிய பொருட்களை மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது.
  • வீட்டில் சாமிக்கு பூஜை செய்யும் போது, ஈரத் துணியை உடுத்திக் கொண்டு பூஜை செய்யக் கூடாது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
  • கீரைகள் மற்றும் கசப்பான காய்கறிகளை சமைப்பதை தவிர்க்கவேண்டும்.
  • லட்சுமி தாயார் மற்றும் முருகருக்கு உகந்த மங்களகரமான நாள் வெள்ளிக்கிழமை. சுரைக்காய் மற்றும் அசைவ உணவுகள் சமைப்பதை வெள்ளிக்கிழமைகளில் தவிர்க்கவேண்டும்.
  • விரத நாட்களில் உருளைக்கிழங்கை படையலில் சேர்க்கக்கூடாது.
  • வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் வெண்ணெயை உருக்கக்கூடாது.
  • பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் நம் உணவில் ஊறுகாய் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
சாப்பிட வேண்டிய உணவுகள்
  • மகாலக்ஷ்மி வாசம் செய்யக்கூடிய தானியங்களில் ஒன்று துவரம்பருப்பு. துவரம் பருப்பை வெள்ளிக்கிழமை சமையலில் பயன்படுத்தினால் வீட்டில் மங்களம் உண்டாகும்.
  • அமாவாசை நாட்களில் வாழை இலை, வாழைக்காய் கண்டிப்பாக இருக்கவேண்டும். முருகனுக்கு உகந்த நாளான கிருத்திகை நாட்களில் முருங்கைக்கீரை சமைக்கவேண்டும்.
  • வாழை சம்மந்தமானவற்றை வெள்ளிக்கிழமைகளில் சமைக்கும் போது வீட்டில் சுபிக்ஷம் உண்டாகும்.
    • வெள்ளிக்கிழமையில் கீரை சமைத்தே ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள் வல்லாரை கீரை சமைக்கலாம்.