தமிழில் ஜி. வீ. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த திகில் கதைக்களம் கொண்ட டார்லிங் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிக்கி கல்ராணி.
இதன்பின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு-2, போன்ற படங்களில் நடித்து வந்தவர்.
இவருக்கும் பிரபல நடிகர் ஆதிகும் காதல் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு திரையுலகில் பேசுபட்டு வருகிறது.
ஆம் மிருகம், ஈரம், அய்யனார், ஆடுபுலி, U Turn ஆகிய படங்களில் நடித்திருந்தார் நடிகர் ஆதி.
நடிகை நிக்கி கல்ராணி, ஆதியுடன் யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.
அப்போது தான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது என சில தரப்பில் இருந்து கூறுகின்றனர்.
மேலும் ஆதி தனது தந்தையின் பிறந்த நாளை தனது குடும்பத்துடன் கொண்டாடினார். கொரோனா ஊரடங்கினால் யாரையும் பெரிதாக ஆதி அழைக்கவில்லையாம்.
ஆனால் நிக்கி கல்ராணியை மட்டும் தனது தந்தையின் பிறந்தநாளுக்கு அழைத்து இருந்தார். அவரும் ஆதி குடும்பத்தினரோடு பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவ்இருவரும் காதலிப்பது உண்மைதான் என்றும் விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என்றும் தெலுங்கு திரையுலகினர் கூறுகிறார்கள்.