லண்டனைச் சேர்ந்த ஒருவர் தனக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதியைப் பார்த்து தம்ப்ஸ் அப் அடையாளம் காட்டிவிட்டுச் சென்றார்.
Aaron McKenzie (26), தனது குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும் தனது முன்னாள் காதலி Kelly Fauvrelle புதிதாக காதலில் விழுந்ததை அறிந்து ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
அப்போது ஒரு நாள், தன் முன்னாள் காதலி தனது புதுக்காதலனுக்கு பரிசு ஒன்றை வாங்கியதை அறிந்த Aaron, கோபத்தில் அவரது படுக்கையறைக்குள் நுழைந்து அவரை 21 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார்.
சத்தம் கேட்டு வந்த Kellyயின் குடும்பத்தினர், பதறிப்போய் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளார்கள்.
அவரது வயிற்றிலிருந்த குழந்தையை, பிரசவ காலத்திற்கு ஏழு வாரங்கள் இருக்கும் நிலையிலும், காப்பாற்றும் முயற்சியாக அறுவை சிகிச்சை செய்து வெளியேஎடுத்துள்ளார்கள் மருத்துவர்கள்.
Kellyயும் உயிரிழக்க, பிறப்பதற்கு முன்பே ரைலி என்று பெயரிடப்பட்ட அவரது குழந்தையும் நான்கு நாட்களுக்குப்பின் உயிரிழந்துள்ளது.
தன் மீதான குற்றங்களை Aaron மறுத்தாலும், ஆதாரங்களின் அடிப்படையில் அவருக்கு குறைந்த பட்சம் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார் Judge Mark Lucraftஎன்னும் நீதிபதி.
தீர்ப்பைக் கேட்ட Aaron, நீதிபதியைப் பார்த்து thumbs up அடையாளம் காட்டிவிட்டு சென்றார்.
அதைக் கண்டு Kellyயின் குடும்பத்தினர் நீதிமன்றத்திற்குள்ளேயே கதறியழ,Kellyயின் சகோதரி ஒருவர், ஆமாம், உனக்கு சிறைக்குள் நல்ல நேரம் கிடைக்கும், குழந்தைக் கொலைகாரா என்று கத்தினார்.