பருக்கள் பொதுவாக பெண்களை பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
அதிகப்படியான ஹார்மோன் சுரப்பு பரு வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதனை தடுப்பதற்காக நாம் நவீன முறையிலான பேசியல் கிரீம்களை பயன்படுத்துவதனால் பருக்கள் அதிகமாவதோடு குறையாது.
இதற்காக நாம் நேரத்தை செலவழிக்க தேவையில்லை. வீட்டிலே பருக்களை தடுப்பதற்கான எளியமுறைகளை மேற்கொள்ளுவோம்.
தேவையான பொருட்கள்
- கேரட் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
- தேன் – 1 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1/2 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் கேரட்டை துண்டுகளாக்கி, 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் வேக வைத்த கேரட்டை நன்கு மசித்து, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதனை முகத்தில் தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை போட்டால், பருக்களை உண்டாக்கும் கிருமிகள் அழிந்து, சீக்கிரம் பருக்கள் காணாமல் போகும்.