நம் கண்கள் அடிக்கடி துடிப்பதை நாம் அனைவரும் உணர்ந்திருப்போம்.இதற்கு என்ன காரணம் என்ன என்பதை நம்மில் பலர் அறியாமல் இருக்கிறோம் .
கண்கள் துடிப்பதனை மயோகீமியா (Mayokimiya) என மருத்துவ துறையில் அழைப்பர்.
கண்களின் மெல்லிய நரம்புகள், தசைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாலேயே இந்நோய் நிலைமை ஏற்படும்.
இதற்கு பலரும் பல விதமான காரணங்களை கூறுவார்கள். இந்த காரணங்கள் அனைத்தும் மூடநம்பிக்கைகள் உருவாக காரணமாகவே அமைந்திருக்கும்.
கண்கள் துடிப்பதற்கான உண்மையான காரணம் என்னவென்றால் மனஅழுத்தம்,தூக்கமின்மை,மனஅழுத்தம் அதிகமாக இருந்தால் கண்கள் அடிக்கடி துடிக்கும்.
உண்மையில் நம் கண்கள் துடித்தால் உடலில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று கூறப்படுகின்றது.
அந்தவகையில் தற்போது கண்கள் துடித்தால் என்ன காரணம் என்று இங்கு பார்ப்போம்.
வேறு காரணங்கள்
- புத்தகம் படிக்கும்போது எழுத்துக்கள் சரியாக தெரியவில்லையெனில் கண்களை பரிசோதித்து கண்ணாடி அணிந்துகொள்ளவேண்டும். இதை விட்டுவிட்டு கண்ணிற்கு சிரமம் தரக்கூடாது.
- மொபைல்,கம்ப்யூட்டர் அதிகமாக பயன்படுத்தினால் கண்கள் சோர்வுற்று அழுத்தம் ஏற்படும்.
- கோபின் அதிகமுள்ள பானங்களான டீ ,காபி குடிப்பதை குறைத்துக்கொள்ளவேண்டும்.அதிகளவு மது அருந்தினாலும் கண் துடிப்பு ஏற்படும்.
- கண்களில் வறட்சி தன்மை உள்ளவர்கள் அதிகளவு தண்ணீர் குடிக்கவேண்டும்.மெக்னிசியம் குறைபாடு உள்ளவர்களுக்கும் அடிக்கடி கண்துடிப்பு ஏற்படுகிறது.
- ஆல்கஹாலை அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கண்கள் துடிக்கும். ஆகவே ஆல்கஹாலை அதிகம் பருகாமல், மருந்து போன்று எடுத்துக் கொள்வது நல்லது.
- ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் கண்களில் உள்ள தசைகள் துடிக்க ஆரம்பிக்கும் என்று சொல்கிறது. அதிலும் மக்னீசியம் குறைபாடு இருந்தால் கண்கள் துடிக்கும் என்று கூறுகிறது.
- கண்களில் அலர்ஜி இருந்தால், அரிப்பு, வீக்கம் மற்றும் கண்களில் தண்ணீர் வடிதல் போன்றவை ஏற்படும். அதுமட்டுமல்லாமல் கண்கள் அடிக்கடி துடிக்கவும் செய்யும்.