சூரியனின் மேற்பரப்பினை மிக அண்மையாக இருந்து எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டது

நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் என்பன இணைந்து சூரியனின் புதிய படம் ஒன்றினை வெளியிட்டுள்ளன.

வழமையை விடவும் மிக அண்மையாச் சென்று சூரியின் மேற்பரப்பை படம்பிடிக்கப்பட்ட நிலையிலேயே இப் புதிய படம் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது சூரியனின் மேற்பரப்பிலிருந்து சுமார் 47 மில்லியன் மைல்கள் தூரத்திலிருந்து குறித்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இத்தூரமான பூமிக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையிலான தூரத்தின் காற்பங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் எடுக்கப்பட்டுள்ள இப் படத்தில் சூரியனின் மேற்பரப்பிலுள்ள தீப்பிளம்புகள் மிகவும் தெளிவாக தென்படுகின்றன.

மேலும் இப் படங்கள் சூரியன் தொடர்பான ஆய்வுகளை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்வதற்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.