ஐஸ்வர்யா ராய் திடீரென மருத்துவமனைக்கு மாற்றம்!

கொரோனா  தொற்றுக்கு உள்ளான நடிகை ஐஸ்வர்யாராய் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவருடைய மகன் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே அவர்கள் குடும்பத்தினருக்கும் நடந்த சோதனையில் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகள் ஆரத்யா பச்சன் ஆகிய இருவருக்கும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதேசமயம் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்றில்லை என்பது உறுதியானது.

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகள் ஆரத்யா பச்சன் ஆகிய இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு பிறகு தற்போது மும்பை நானாவதி மருத்துவமனைக்கு ஐஸ்வர்யா ராய் மாற்றப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.