மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, பன்வெலில் பகுதியில் இந்தியாபுல்ஸ் எனப்படும் கொரோனா தனிமை முகாமில் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட 40 வயது பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, கொரோனா பாதிப்படைந்த அந்த பெண்ணின் அறைக்கு சென்று, தன்னை மருத்துவராக அறிமுகம் செய்து மசாஜ் செய்வது போல் அப்பெண்ணை வண்புணர்வு செய்துள்ளார் 25 வயது சுபம் என்பவர்.
இச்சம்பவமானது, சுபம் என்பவரின் சகோதரர் அதே இந்தியாபுல்ஸ் கட்டிடத்தில் ஐந்தாவது மாடியில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். அவரது பார்ப்பதற்காக வந்த சுபம் என்பவர் தவறுதலாக 2 மாடியில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அறை கதவை தட்டியுள்ளார்.
உடனே தன் சகோதரர் இல்லை என சமாளித்துள்ளார். இந்நிலையில் மறுநாள் அதேபோல் அப்பெண்ணின் அறை கதவை தட்டி தன்னை மருத்துவராக அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து சுபம், அந்தப் பெண்ணிடம் தற்போது ஏதேனும் பிரச்சினைகள் அல்லது அறிகுறிகள் உள்ளதா என மருத்துவர் போல் கேட்டுள்ளார் சுபம். இவரை மருத்துவர் என நினைத்த பாதிக்கப்பட்ட இல்லத்தரசி, உடல்வலி உள்ளது என கூறியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மசாஜ் செய்தால் சரி ஆகும் என கூறி தவறான முறையில் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். தனக்கு நடந்த இந்த அசம்பாவிதத்தை குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கோவிட் -19 முடிவுகள் காத்திருப்பதால் போலீசார் இதுவரை அவரை கைது செய்யவில்லை. அவரின் அறிக்கை வந்ததும் எதிர்மறையாக இருந்த உடனடியாக கைது செய்யப்படுவார் எனவும், இல்லையெனில் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததும் கைது செய்யப்படுவார் என கூறியுள்ளார்.
மேலும் சுபம் மீது பிரிவு 376 மற்றும் 354 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.