தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு – 1/2 கப்
அரிசி – 3/4 கப்
விருப்பமான காய்கறிகள் – 1 கப் (கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், முருங்கை
தண்ணீர் – 4 கப்
சாம்பார் பவுடர் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
புளி கரைசல் – 1/4 கப்
நெய் – 1 தேவையான அளவு
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
பூண்டு – 10
பச்சைமிளகாய் – 5
தாளிக்க :
சீரகம் – அரை டீஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காய தூள் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 3
செய்முறை :
வெங்காயம் மற்றும் காய்கறிகளை சிறிது துண்டு, துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். முதலில் பருப்பு, அரிசி இரண்டையும் நீர் விட்டு அலசி பின்னர் அதில் 4 கப் தண்ணீரை ஊற்றி ஒரு பத்து நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்.
அதன் பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டிவிட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து உப்பு, நெய், பச்சைமிளகாய் மற்றும் பூண்டு ஆகியவை சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேகவைக்கவும்.
பின்னர் ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், வெட்டி வைத்த காய்கறி ஆகியவற்றை போட்டு சாம்பார் பவுடர், மஞ்சள்தூள், உப்பு உள்ளிட்டவை சேர்த்து நன்கு வதக்கி, குக்கராக இருந்தால் காய்கறிகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு விசிலுக்கு வேகவைத்துக்கொள்ளவும்.
பின்னர் காய்கறி வெந்து ஆவி வந்ததும் அத்துடன் புளி கரைசல் சேர்த்து நன்கு கொதித்த நன்கு வெந்த பருப்பு சாதத்தை அத்துடன் சேர்த்து கலந்து கிளறி விடவும். பின்னர் கடாயை அடுப்பில் வைத்து சூடான பின்னர் தாளித்து சாதத்தில் கொட்டி கிளறி கொத்தமல்லி இலை தூவி பரிமாறினாள் சுவையான சாம்பார் சாதம் தயார்.!