மீண்டும் கொரோனாவின் கோரப்பிடியில் சீனா.!!

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 14,645,947 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரசால் 608,942 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 8,736,951 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா மட்டும் பிரேசிலில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.

இந்நிலையில், சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், சீனாவின் வடமேற்கு ஷின்ஜியாங் மாகாணத்தின் தலைநகர் உரும்கியில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் அங்கு போர்க்கால அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.