அழுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. அது உங்கள் உடலிலிருந்து ஆரோக்கியமற்ற பாக்டீரியாவை நீக்குகிறது. மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, மன அழுத்தத்தை நீக்குகிறது.
கால்விரலில் வளரும் நகங்களை விட, 4 மடங்கு அதிகமாக கைவிரலில் நகங்களானது வேகமாக வளரும்.
உங்களுக்கு அக்கறையுள்ள நபரிடமிருந்து எதிர்பாராத செய்திகள் வந்தால், உங்கள் உடலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒருவர் வளர வளர அவரது மூக்கு மற்றும் காது வளர்ச்சி அடையும். ஆனால் கண்கள் ஒரே அளவில் தான் இருக்கும்.
கூச்ச சுபாவம் கொண்ட மக்கள் பெரும் கவனிப்பு திறன்களை கொண்டுள்ளனர்.
மற்ற விரல்களில் வளரும் நகங்களின் வளர்ச்சியை விட, நடுவிரலில் நகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
பெண்கள், ஆண்களை விட விரைவாக பேசவும், படிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். மேலும், கடினமான சொற்களஞ்சியத்தையும் பயன்படுத்துகிறார்கள்.
நிறைய சத்தியம் செய்கிறவர்கள் நேர்மையானவர்களாகவும், தங்கள் நண்பர்களுடன் வெளிப்படையாகவும் இருக்கிறார்கள்.
கவலையுள்ள மக்கள் மற்றவர்களிடமிருந்து பொய்களை கண்டுபிடிப்பதில் மேம்பட்டு இருக்கின்றனர்.
மனிதனின் மூளையானது பகல் நேரத்தை விட, இரவில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.
மனிதனால் 20 நாட்கள் உணவு உட்கொள்ளாமல் உயிர் வாழ முடியும். ஆனால் 2 நாட்கள் கூட நீர் அருந்தாமல் உயிர் வாழ முடியாது.
தனியாக இருக்கும்போது நீங்கள் தனிமையை உணர்வதில்லை. யாரும் உங்களை பற்றி கவலைப்படாத போது நீங்கள் தனிமையை உணர்கிறீர்கள்.
ஆண்களை விட, பெண்கள் இரு மடங்கு வேகமாக கண்களை சிமிட்டுவார்கள்.
ஒரு மனித முடியின் வாழ்நாளானது சராசரியாக 3-7 வருடங்கள் ஆகும். அதன் பின் அந்த முடியானது உதிர்ந்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும்.