உடல் எடையைக் குறைக்க பல்வேறு டயட்டுகள் இருக்கின்றன. எனினும், அனைவருக்குமே அனைத்து டயட்டும் நல்ல பலனைத் தரும் என்று கூறிவிட முடியாது.
ஆனால், ஒரு சில டயட்டுக்கள் பொதுவானதாக இருக்கும். ஒழுங்கான முறையில் மேற்கொண்டால் நல்ல மாற்றத்தினை உணரலாம்.
உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர் அற்புதமான உணவுப் பொருள் தான் பசலைக்கீரை. பசலைக்கீரையை முக்கியமாக கொண்ட டயட்டை ஒருவர் மேற்கொண்டால், 7 நாட்களில் 5 கிலோ எடை வரை குறைத்துவிடலாம்.
நாள் 1
- காலையில் 1 வேக வைத்த முட்டை, 2 தக்காளி மற்றும் பசலைக்கீரையுடன் எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்க்கப்பட்ட சாலட், 2 துண்டு முழு தானிய பிரட் சாப்பிட வேண்டும்.
- க்ரில் சிக்கன், பசலைக்கீரை சூப்பை மதிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பசலைக்கீரையுடன் மற்ற காய்கறிகள் சேர்த்து தயாரிக்கப்பட்ட சாலட்டை இரவு உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாள் 2
- ஓட்ஸ் உடன் யோகர்ட், இனிப்பில்லாத டீயை காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பசலைக்கீரை சூப்பை மதிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பசலைக்கீரை மற்றும் ஆரஞ்சு சூப்பை இரவு உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாள் 3
- பசலைக்கீரை ஆம்லெட், 1 துண்டு முழு தானிய பிரட் காலை உணவாக சாப்பிட வேண்டும். மதிய உணவு
- மீன், பசலைக்கீரை மற்றும் சாதத்தை மதிய உணவாக சாப்பிட வேண்டும்.
- வேக வைத்த பசலைக்கீரை மற்றும் 2 ஆரஞ்சு பழங்களை இரவு உணவாக சாப்பிட வேண்டும்.
நாள் 4
- பசலைக்கீரை, ஆப்பிள் மற்றும் கேரட் ஜூஸ்ஸை காலை உணவாக சாப்பிட வேண்டும்.
- சிக்கன் அல்லது மீன், பசலைக்கீரை சாலட்டை மதிய உணவாக சாப்பிடலாம்.
- பசலைக்கீரை மசாலா சாதத்தை இரவு உணவாக சாப்பிட வேண்டும்.
நாள் 5
- 2 வேக வைத்த முட்டை, ஒரு பௌல் யோகர்ட் காலை உணவாக சாப்பிட வேண்டும்.
- சிக்கன் அல்லது மீன் மற்றும் பசலைக்கீரையை மதிய உணவாக சாப்பிட வேண்டும்.
- விருப்பமான பழச்சாற்றை இரவு உணவாக சாப்பிட வேண்டும்.