அண்மைகாலமாகவே இடைவிடாத கலவரமாக ஓடிக்கொண்டிருப்பது வனிதா குடும்ப சர்ச்சை தான். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் பீட்டர் பால் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டது தான் சூடான விவாதம்.
இதன் நடுவே தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், சூரியா தேவி ஆகியோருடன் வனிதாவுக்கு மோதல் முற்றிக்கொண்டே போகிறது.
இதற்கிடையில் பீட்டர் பாலிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரஷாந்த் கிருபாகரன் என்பவர் பீட்டர் பால் பற்றி பல பகிரங்கமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதில் அவர் பீட்டர் பாலுடன் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நான் பணியாற்றினேன். அப்போது அவரிடன் ஸ்க்ரிப்ட் இல்லை. தயாரிப்பாளருக்கு வாக்கு கொடுத்துவிட்டோம் என்பதற்காக அந்த படத்தை தயாரிக்க விரும்பினார். இதற்காக கதையில் நாங்கள் ஒரு மாத காலம் பணியாற்றினோம். கதையை தயார் செய்தோம்.
மேலும் ஹீரோயின்களுக்கு கதை சொல்கிறேன் என தயாரிப்பாளருடைய பணத்தில் மும்பை சென்று வந்தார். ஸ்கிரிப்டை கொடுக்காமல் நடிகர்களுக்கான ஆடிசன் நடத்தி வந்தார். இதனால் தயாரிப்பாளருக்கும் இவருக்கும் இடையே பிரச்சனை எழ படம் கைவிடப்பட்டது. பீட்டர் பால் பேட்டியளித்து அவரின் அலுவலகம் அல்ல. தயாரிப்பாளருடையது.
பீட்டர் பால் பெண்களோடு தொடர்பு வைத்திருந்ததாகவும், பொய்களை அதிகம் பேசுவார், பணத்தை வீணடித்துள்ளார், வனிதா வில்லி அல்ல, ஏமாந்து போன பாதிக்கப்பட்ட பெண் என குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்துள்ளார்.