தாய்நாடு திரும்பினாரா விஜய் மகன்?

கனடாவில் மூன்று மாதங்களாக சிக்கிய விஜய்யின் மகன் சஞ்சய் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான நிலையங்களை அனைவரும் மூடியுள்ளன. இதனால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்கள் மற்றும் வேலை நிமித்தமாக சென்றவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. நடிகர் விஜய்யின் மகனன ஜேசன் சஞ்சய் கனடாவில் மாட்டிக்கொண்டார்.

இதனால் நாடு திரும்ப முடியாமல் மூன்று மாதங்களுக்கு மேலாக கனடாவிலேயே சிக்கிக் கொண்டார். இப்போது வந்தே பாரத் திட்டத்தின் மூலம், கனடாவில் இருக்கும் இந்தியர்களை தாய்நாட்டுக்கு விமானம் மூலம் அழைத்து வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் இப்போது சஞ்சய் தமிழகம் திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது விஜய்யின் குடும்பத்தினருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.