திரிஷாவை திருமணம் செய்கிறார் சிம்பு…?

நயன்தாரா மற்றும் ஹன்சிகா ஆகியோர்களுடன் நடிகர் சிம்பு காதல் என்றும் அதன்பின் இருவருடனும் பிரேக் அப் ஆகிவிட்டது என்றும் கோலிவுட் திரையுலகில் கிசுகிசுக்கள் வந்தன என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி பல நடிகைகளுடன் சிம்பு கிசுகிசுக்கப்பட்டார் என்பதும் அவரது திருமண செய்தி ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை சமூக வலைதளங்களில் வைரலாகும் என்பதும் வழக்கமான ஒன்று

இந்த நிலையில் தன்னுடைய நெருங்கிய தோழியும் நடிகையுமான த்ரிஷாவை சிம்பு திருமணம் செய்ய போவதாக தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ப்லீம் பேர் நிறுவனத்திடம் இருந்து வெளியாகியுள்ள இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாததால் நெருங்கிய வட்டாரங்கள் இது முற்றியிலும் வதந்தியாக இருக்கக்கூடும் என யூகித்துள்ளனர்.

எனினும், இது குறித்து சிம்பு – திரிஷா தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. செம ஷாக்கிங்கான இந்த சேதி வதந்தியாக இருந்தாலும் கேட்பதற்கு கொஞ்சம் நல்லாதான் இருக்கு… காரணம், படங்களிலே சிம்பு – திரிஷாவின் காதல் காம்போ சும்மா அள்ளும்…. இது அப்டியே நிஜ வாழ்க்கையிலும் நடந்தால் என்னாம்மா இருக்கும்… நினைத்து பார்த்தாலே செமயா இருக்கு…..
அது அப்படியே இருக்கட்டும் வதந்தியாக பரவி வரும் இந்த தகவல் தற்போது சூப்பர் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.