நோயெதிர்ப்பு ஆற்றலை எளிய முறையில் அதிகரிக்க வேண்டுமா?

உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளிலிருந்து காத்துக்கொள்ள நம் உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

இன்று எத்தனையோ கண்ணிற்கு தெரியாத நோய்கள் உருவெடுத்து நம்மை ஆட்டிப்படைத்து வருகின்றது.

இதற்கு உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை, சுற்றுச்சூழல் பாதிப்பு என பல்வேறு காரணங்கள் கூறிக்கொண்டே போகலாம்.

இதிலிருந்து விடுபட வேண்டுமாயின் ஆயுர்வேதத்தில் சூப்பரான அற்புத இயற்கை டீகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

​இஞ்சி டீ

அரைத்த இஞ்சியை 1/2 ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இஞ்சியை ஒரு கிளாஸ் டம்ளரில் 5-6 நிமிடங்கள் வேக வைக்கவும். பிறகு இதை வடிகட்டி குடித்து வாருங்கள்.

இது பசியின்மை, சளி மற்றும் இருமலை போக்க உதவுகிறது. மற்ற வயிற்று பிரச்சனைகளை நீக்குகிறது.

​இலவங்கப்பட்டை டீ

1/2 அங்குல இலவங்கப்பட்டையை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு 5-7 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். பிறகு அதை வடிகட்டி குடியுங்கள்.

இது உங்க எடையை குறைக்க பயன்படுகிறது. இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்கு எதிராக போராடுகிறது.

துளசி டீ

4-5 துளசி இலைகளை எடுத்து 10 நிமிடங்கள் தண்ணீரில் வேக வைக்கவும். பிறகு பாத்திரத்தின் மூடியை திறந்து அதை வடிகட்டி குடியுங்கள்.

இது நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது. இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்த உதவுகிறது.

​சீரகம் டீ

1/2 டீ ஸ்பூன் சீரகம், 1/2 டீ ஸ்பூன் கொத்தமல்லி விதைகள், 1/4 டீ ஸ்பூன் வெந்தய விதைகள் போன்றவற்றை சேர்த்து தேநீர் தயாரியுங்கள். நன்றாக கொதிக்க விட்டு பிறகு வடிகட்டி வெதுவெதுப்பாக குடித்து வாருங்கள்.

சீரகம் தேநீர் நம் செரிமானத்திற்கு உதவக்கூடிய ஒன்றாகும். இது கூடுதல் கிலோ எடையை குறைக்க பயன்படுகிறது.

​துளசி கருப்பு மிளகு தேநீர்

3-4 துளசி இலைகள், கருப்பு மிளகு, ஒரு கிராம்பு என எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த பொருட்கள் அனைத்தையும் 2 கிளாஸ் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்து வாருங்கள்.

இது ஒரு சிறந்த நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க கூடிய தேநீராகும். இது பருவகால நோய்த்தொற்றுக்கு எதிராக போராட உதவுகிறது