நடிகர் சூர்யாவின் சூரரை போற்று படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். சுதா கே பிரசாத் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய நிலையில் கொரோனாவால் தள்ளிப்போனது.
சூர்யாவின் சினிமா பயணமும் அவரின் வளர்ச்சியும், வெற்றியும், தோல்வியும் ஒரு பெரும் பின்னணி கொண்டது.
அதில் தோல்வியை சந்தித்த படம் அஞ்சான். முதன் முதலாக மீம்ஸ் போடப்பட்டு கேலி கிண்டல் செய்யப்பட்ட படம் எனவும் சொல்லப்பட்டது.
மேலும் இயக்குனர் லிங்குசாமி தான் தன் முழு திறமையையும் இந்த படத்தில் காட்டியிருப்பதாக கூற படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்த போது கலவையான விமர்சனங்களே வந்தன.
இந்நிலையில் அஞ்சான் படம் ஹிந்தி டப் செய்யப்பட்டு வெளியாகி 140 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளதாம்.
ஹிந்தியில் இப்படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சூர்யா, சமந்தா ஜோடி நடிக்க வித்யுத் ஜமால் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.