சினிமாவிலிருந்து விலக முடிவு! பிரபல இயக்குனர் அதிரடி பதிவு..!!

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதுவரை இந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை எட்டிவிட்டது. இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்துவிட்டது.

சினிமா தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. தியேட்டர்கள் இப்போதைய கொரோனா சூழ்நிலையில் திறக்கப்படும் நிலையில் இல்லை. இதனால் சினிமா ஊழியர்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹிந்தி சினிமாவில் முல்க், ஆர்டிகிள் 15, தப்பட் ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் அனுபவ் சின்ஹா பாலிவுட் சினிமாவிலிருந்து விலகுகிறேன் என டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

மேலும் ட்விட்டர் ப்ரோஃபைல் பக்கத்தில் அவர் அடைபுக்குறியில் பாலிவுட் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

இதனை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். ஹிந்தியில் படம் எடுக்காவிட்டாலும் மற்ற மொழி சினிமாவில் படம் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.