பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கட்டாயம் செய்ய வேண்டியது என்ன?..!!

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியானது நமது உடலில் இருக்கும் மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் மூலமாக கிடைக்கப்பெற்று, நமது உடலின் இயக்கத்தை பாதுகாக்கின்றது. இந்த வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உடலில் குறைவாக இருக்கும் பட்சத்தில் பல நோய்களும், முதுமை தோற்றமும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

பெண்கள் வைட்டமின் மற்றும் மினரலை கொண்ட சத்தான பொருட்களை அதிகளவில் சாப்பிட வேண்டும். பழங்கள் மற்றும் பருப்பு வகை உணவுகளை அதிகளவில் சாப்பிட வேண்டும். மேலும், பணியின் காரணமாக காலையில் உணவருந்தாமல் செல்லும் பெண்கள், அவர்களின் ஆரோக்கியம் மறைமுகமானாக பாதிக்கப்படுகிறது என்று தெரியாமலேயே இருக்கின்றனர்.

காலையில் உணவருந்திய பின்னர் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து பழச்சாறு அல்லது உடலுக்கு உகந்த தேநீரை அருந்த வேண்டும். இந்த சமயத்தில் தேநீரில் கலக்கப்படும் சர்க்கரைக்கு பதிலாக தேனை கலந்து சாப்பிட்டால் நல்லது. மேலும் அரிசி வகையிலான உணவுகளை குறைத்து கொண்டு சிறுதானிய வகையில் உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.

தினமும் காலையில் குறைந்தது அரைமணி நேரம் நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்கூடம் அழைத்து வீட்டிலோ உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வரவேண்டும். இன்றளவில் இருக்கும் பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை சம்பந்த புற்றுநோய்கள் அதிகளவில் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

இன்று இருக்கும் பெண்கள் இரவில் சரியாக உறங்குவது இல்லை, இந்த பிரச்சனையால் பலர் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாவதுண்டு, தினமும் கண்டிப்பாக 7 மணிநேரமாவது உறங்க வேண்டும். உடலில் ஏதேனும் குறைகளோ அல்லது நோய்களோ இருந்தால் மருத்துவரிடம் சென்று தேவையான சிகிச்சையை அல்லது ஆலோசனையை பெற்று கொள்ள வேண்டும்.