மகள் மனைவியின் முன்பே காதலியுடன் சென்ற கணவன்..

திருப்பதியில் வெங்கடாசலம், சரஸ்வதி தம்பதியினர்கள் 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இவர், காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது.

இந்த நிலையில், அந்த பெண் கர்ப்பம் ஆனதால், வீட்டிற்கு வருவதையே நிறுத்தியுள்ளார் வெங்கடாசலம்.

இதனால் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இதன் பின்னர், விசாரணை முடிந்து வெங்கடாசலம் பைக்கில் கள்ளகாதலியுடன் வெளியே வந்த போது முதல் மனைவியும் அவரது குழந்தையும் கண்ணீர் விட்டு கதறியபடி அழுதுள்ளனர். ஆனாலும் காவலர்களும், கணவனும் இதைக்கண்டு இறக்கப்படவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.