ஆரம்ப காலத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த காலத்தில் அவருக்கு ஜோடியாக பல்வேறு திரைப்படங்களில் நடிகை காயத்ரி நடித்திருப்பார். இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தில் மணமேடையில் காயத்ரி மேக்கப்புடன் இருக்கும் பொழுது, அவரை பார்த்து யாருடா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கு என்று விஜய் சேதுபதி அடிக்கடி கூறுவார்.
அந்த வசனம் இன்றும் அனைத்து இளைஞர்களிடமும் மறக்காத ஒன்றாக இருக்கின்றது. அந்த படத்திற்கு பின்னர் இனி மேக்கப் போட மாட்டேன் என்று முடிவு செய்தாராம் காயத்ரி. விஜய்பதியும், காயத்ரியும் இணைந்து 6 படங்களில் நடித்திருக்கின்றனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் ஒரு சிலவை தான்.
விஜய்சேதுபதிக்கு பொருத்தமான நடிகைகளில் நடிகை காயத்ரி முக்கியமானவர். மேலும், பல்வேறு படங்களில் அவருடன் வரும் காலங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். இந்த நிலையில் சிறுவயதில் தான் உடை அணியாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காயத்ரி வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள், ‘ஒரு உள்ளாடை ஆவது போட்டு இருக்கலாம்’ல்ல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.