யாழ்.கேரதீவு- சங்குப்பிட்டி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் கோவிலுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது.
டிப்பர் வாகனத்தின் முன் சக்கரத்தில் காற்று குறைந்ததால் வாகனம் கட்டப்பாட்டை இழந்ததாக கூறப்படுகின்றது.
மேலும் சம்பவத்தில் கோவில் பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.