வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களுக்கு புள்ளிகளை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் மீண்டும் அமுல்படுத்த உத்தேசித்துள்ளது.
அண்மைய நாட்களாக இடம்பெறுகின்ற வாகன விபத்துக்கள் காரணமாக, மீண்டும் இந்தத் திட்டம் குறித்து அரசாங்கத்தின் கவனம் திரும்பியிருக்கிறது.
இதன்படி 24 புள்ளிகள் தலா சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெறுகின்ற மற்றும் வீதிச் சட்டங்கள் மீறப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அந்த புள்ளிகள் குறைந்துசெல்லும்.
இவ்வாறு புள்ளிகள் குறைந்து பூஜியத்தை எட்டியவுடனே குறித்த சாரதி அனுமதிப் பத்திரம் இரத்தாகும் என்பதே இந்த திட்டமாகும்.
இந்நிலையில் மிகவிரைவில் இத்திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.