கனடாவில் தனது மகள்கள் இருவருடன் தந்தை மாயமான வழக்கில் உண்மை வெளியாகியுள்ளது. கியூபெக்கைச் சேர்ந்த மார்ட்டின் கார்ப்பெண்டியர் (44), அவரது மகள்கள் நோரா
(11) மற்றும் ரோமி (6)உடன் மாயமானார். கியூபெக் வரலாற்றிலேயே மிக நீண்ட ஆம்பர் எச்சரிக்கை இந்த வழக்குக்காகத்தான் விடப்பட்டது.
மாயமான மூவருமே பின்னர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
முதலில் நோராவும், ரோமியும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், மார்ட்டினைக் காணவில்லை.
பின்னர் அவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். குழந்தைகள் எப்படி இறந்தார்கள், மார்ட்டின் எங்கு போனார், அவர் எப்படி இறந்தார் என பல கேள்விகள் தொக்கி நின்ற நிலையில், நேற்று கனடா பொலிசார் அந்த கேள்விகளுக்கான பதில்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளனர்.
மார்ட்டினும் பிள்ளைகளும் காணாமல் போனது, ஜூலை 8 அன்று. ஜூலை 11 அன்று, பிள்ளைகள் இருவரும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், அவர்கள் காணாமல் போன அன்றே கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஐஸ் கிரீம் வாங்கித்தருவதாக மகள்களை வெளியே அழைத்துச் சென்ற மார்ட்டின், சில மணி நேரத்திற்குள்ளேயே அவர்களை அடித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர், திங்கட்கிழமையன்று மார்ட்டினின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
ஆனாலும், மார்ட்டினும் உயிரிழந்துவிட்டதால் அவர் எதற்காக மகள்களைக் கொன்றார் என்ற மர்மம் விலகாமலே போய்விட்டது.
முதலில் பிள்ளைகளை மார்ட்டின் வெளியே அழைத்துச் சென்றபோது, அவர் மனதில் கொலை செய்யவேண்டும் என்பது போன்ற எண்ணங்கள் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும், அந்த கார் விபத்துதான் அவரது மனதில் வன்முறை எண்ணங்களை ஏற்படுத்தியிருக்கவேண்டும் என்றும் பொலிசார் கருதுகிறார்கள்.
விபத்து நடந்து 12 மணி நேரத்திற்குள் மூவருமே உயிரிழந்திருக்கிறார்கள், அதாவது ஜூலை 9ஆம் திகதிக்குள்.
ஆனால், உயிரிழந்து 2 நாட்களுக்குப்பின்தான் பிள்ளைகள் உடலும், சுமார் 10 நாட்களுக்குப் பிறகுதான் மார்ட்டின் உடலும் கிடைத்துள்ளன.
காடு அடர்த்தியாக இருந்ததாலும், மூவருமே ஏற்கனவே உயிரிழந்திருந்ததாலும், உடல் வெப்பத்தைக் கொண்டு யாரேனும் மறைந்து இருக்கிறார்களா என்று கண்டு பிடிக்கும் பொலிசாரின் கருவியால்கூட அவர்களை கண்டுபிடிக்கமுடியாமல் போயிருக்கிறது பரிதாபம்தான்!