வீடியோ டப்பிங் அப்பிளிக்கேஷனான டிக்டாக் ஆனது உலளவில் மிகவும் பிரபல்யமடைந்துள்ளது.
எனினும் சில நாடுகளில் இந்த அப்பிளிக்கேஷனுக்கு எதிர்ப்புகள் காணப்படுவதுடன், தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதன் காரணமாகவே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதுடன், சில நாடுகள் பயனர்களின் தரவுகளை திருடுவதாக குற்றம் சுமத்தியும் தடை செய்துள்ளன.
இப்படியிருக்கையில் தற்போது அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டுவரும் இந்நிறுவனத்திற்கு அமெரிக்காவிலும் எதிர்ப்புக்கள் வலுத்துள்ளன.
இதற்கு காரணம் சீனாவின் தூண்டுதலின்பெயரில் பயனர்கள் தகவல்களை TikTok திருடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து தனது தலைமையகத்தினை லண்டனிற்கு மாற்றுவது தொடர்பில் அந்நிறுவனம் பரிசீலித்துள்ளது.
இதற்காக பிரித்தானிய அரசுடன் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தையும் நடாத்திவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.