ஸ்மார்ட் கைப்பேசிகள் தீப்பற்றும் அபாயம்: ஆய்வில் எச்சரிக்கை

ஸ்மார்ட் கைப்பேசிகளில் உள்ள வசதிகள் காரணமாக அவற்றின் மின்கலங்களில் உள்ள சார்ஜ் விரைவாக குறைகின்றது.

எனினும் மீள சார்ஜ் செய்வதற்கு சில மணித்தியாலங்கள் வரை எடுக்கின்றது.

இதனை தவிர்ப்பதற்கு Fast Charging தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் மூலம் 20 நிமிடங்களில்கூட கைப்பேசிகளை சார்ஜ் செய்யும் வசதி காணப்படுகின்றது.

எனினும் இவ்வாறான தொழில்நுட்பத்தினால் கைப்பேசிகள் தீப்பற்றும் அபாயத்தைக் கொண்டிருப்பதாக ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Xuanwu Lab எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்காலத்தில் மேலும் குறைந்த நேரத்தில் கைப்பேசிகளின் மின்கலங்கள் சார்ஜ் செய்யக்கூடிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் இது மேலும் ஆபத்தை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.