இந்திய அளவில் KaiOS இயங்குதளத்தில் செயற்படும் சாதனங்களுக்காக புயதி வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.
இதன்படி ஏற்கணவே கூகுள் அஸிஸ்டன்ட் சாதனத்தில் தரப்பட்டுள்ள Auto Translate வசதி வழங்கப்படவுள்ளது.
இதேவேளை தற்போது ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு, மராத்தி மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் இச் சேவையினை பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.
எனினும் விரைவில் கன்னடம் மற்றும் குஜராத்தி மொழிகளிலும் இச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம் பத்தில் ஒன்பது பயனர்கள் பொதுவாக ஆங்கில மொழியில் தேர்ச்சி இல்லாதவர்களாகவே காணப்படுகின்றனர்.
இவ்வாறானவர்களுக்கு இவ் வசதியானது பெரிதும் உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.