இந்தியில் அஞ்சான் படம் செய்த சாதனை

சூர்யா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான அஞ்சான் படம் படுதோல்வி அடைந்த நிலையில் இப்போது இந்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைக்க என கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் கூட்டணியுடன் உருவாகி 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸானது அஞ்சான் திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான திரைப்படம் படுதோல்வி அடைந்தது. திரைக்கதை என்ற வஸ்து இல்லாமல் எடுக்கப்பட்ட அஞ்சானை இணையத்திலும், பத்திரிகைகளிலும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் படத்தின் இயக்குனர் லிங்குசாமி கொடுத்த பில்டப்புகளை நம்பி சென்றவர்கள் ஏமாந்ததால் அவரைப் பற்றி மீம்ஸ்களாகப் போட்டு கிழித்தெறிந்தனர். அந்த படத்தில் சறுக்கிய லிங்குசாமி இன்னமும் தலைதூக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ் சினிமா கண்டிராத தோல்வி படமாக அமைந்தது அஞ்சான்.

ஆனால் இந்தியில் டப் செய்யப்பட்டு ரிலிஸான அந்த திரைப்படம் படைத்த சாதனையை ஒன்றைக் கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள். யுடியூபில் வெளியான கடார்நாடக் கில்லாடி 2 திரைப்படம் 14 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக அந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான தனஞ்செயன் ‘எல்லோரும் சூர்யாவையும் லிங்குசாமியையும் கேலி செய்தார்கள். ஆனால் இந்திரசிகர்கள் 14 கோடி பேர் இந்த படத்தை பார்த்துள்ளனர். ஒவ்வொரு மொழி சந்தையும் ஒவ்வொரு மாதிரி. ஆனாலும் அஞ்சான் ஒரு நல்ல பாடம்’ எனக் கூறியுள்ளார்.