தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர்ப்படம் தயாராகியுள்ளது.
இப்படத்தை பார்க்க ரசிகர்கள் செம்ம ஆவலுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்த பிறகே மாஸ்டர் வருக் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இதுநாள் வரை இப்படத்தின் டீசர் அப்டேட் கூட வரவில்லை என்பது தான் பலருக்கும் வருத்தம்.
சரி இது ஒரு புறம் இருக்கட்டும் தளபதி விஜய் முதன் முதலாக இரட்டை வேடங்களில் நடித்த படம் அழகிய தமிழ் மகன்.
இப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. அதை தொடர்ந்து இவர் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி, பிகில் ஆகிய படங்கள் செம்ம ஹிட் அடித்தது.
ஆனால், 20 வருடங்களுக்கு முன்பே விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க வேண்டியதாம். ஆம், அப்படத்தை ரவிமரியா இயக்கவிருந்தாராம்.
அப்படத்திற்கு ஜெராக்ஸ் என்று கூட டைட்டில் வைத்திருந்தார்களாம், ஆனால், ஒரு சில காரணங்களால் அப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதாம்.