ட்ராப் ஆனதா ரஜினியின் அண்ணாத்த திரைப்படம்..!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து. குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதிஸ் என பலரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரானா ஊரடங்கு காரணமாக தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்க பட்டுள்ளது.

கொரானா தாக்கம் குறைந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு துவகும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரானாவிற்கு முழுமையான தீர்வு வரும் வரை நான் படப்பிடிப்பு வர மாட்டேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறிவிட்டாராம்.

மேலும் அண்ணாத்த படத்திற்காக நான் வாங்கிய சம்பளத்தை கூட நான் திருப்பி தந்து விடுகிறேன் என ரஜினி கூறிவிட்டாராம்.

இதனால் தற்போது இப்படம் கைவிடப்படும் என சில தரப்பில் இருந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இதெல்லாம் பொய் தான், யாரோ கிளப்பிவிட்ட வந்ததி, அண்ணாத்த கண்டிப்பாக ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.