தமிழ் வசூல் மன்னர்களாக திகழ்ந்து வருபவர்கள் இருவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தல அஜித்.
தல அஜித் பல படங்களை ரீமேக் செய்து நடித்துள்ளார் என்பதனை நாம் அறிவோம்.
அதிலும் ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக் தான் தல அஜித்தின் திரைப்பயணத்தில் மிக பெரிய மாபெரும் ஹிட்டான படமாக அமைந்தது.
மேலும் பில்லா படத்தை விட அஜித்திற்கு ரஜினியின் பல படங்களை ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்று ஆசையாம்.
அதில் அஜித் மிகவும் ரீமேக் செய்ய ஆசைப்பட்டது ரஜினி இரு வேடங்களில் நடித்து மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ஜானி என்ற மாபெரும் ஹிட் படம் தான் அது. இதை நாமே கூறியிருந்தோம்.
இப்படம் அப்போதைய காலகட்டத்தில் மாபெரும் வெற்றியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தேடி தந்து குறிப்பிடத்தக்கது.
அதோடு ரஜினியின் தீ படத்தை ரீமேக் செய்ய தான் அஜித் முடிவெடுத்து விஷ்ணுவை அனுகியுள்ளார். ஆனால், அவை நடக்காமல் தான் பில்லா நடந்தது.