கல் உடைக்கும் குடும்பக், சூர்யாவால் டாக்டர் ஆன கதை…!!

சூர்யா இன்று இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகர். இவர் நடிப்பிப் தற்போது சூரரைப் போற்று படம் தயாராகியுள்ளது.

இதை தொடர்ந்து சூர்யா வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க, வெற்றிமாறன் இயக்கவுள்ளார்.

சூர்யா தன் அகரம் தொண்டு நிறுவனம் மூலம் பல குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார், அந்த வகையில் 10 வருடத்திற்கு நந்த குமார் என்பவருக்கு சூர்யா உதவியுள்ளர்.

அவரின் குடும்பம் கிராமத்தில் கல் உடைத்து வருபவர்களாம். தற்போது நந்தகுமார் மருத்துவர் ஆகியுள்ளார்.

அதோடு சொந்த ஊரில் வீடு கட்டி தற்போது தன் தாய் தந்தையை வேலைக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்து பார்த்து வருகிறாராம். இதற்காக சூர்யாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.