மணிரத்னம் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பலரும் பாதி சம்பளமாக இருந்தாலும் பரவாயில்லை என்று வருவார்கள்.
அந்த வகையில் இவர் தற்போது ரூ 200 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் கொரொனா பிரச்சனையால் படப்பிடிப்பு நின்றுள்ளது, எப்படியும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது அதுவும் அரசாங்கம் பெர்மிஷன் கொடுத்தால்.
இந்நிலையில் மணிரத்னம் இந்த கொரொனா சமயத்திலும் தன் உதவி இயக்குனர்களுக்கு பாதி சம்பளத்தை தவறாமல் தந்துவிடுவதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
மேலும், உதவி இயக்குனர்களுக்கு மாதம் பிறந்தால் சம்பளம் என்ற முறையே மணிரத்னம் தான் கொண்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.