வலிமை படத்தின் அப்டேட் இந்த நாளில் வருகிறதா?

தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வந்த படம் வலிமை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இப்படம் கொரொனா காரணமாக படபிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட் ஆகஸ்ட் 3ம் தேதி வருகிறது என இணையத்தில் நேற்றிலிருந்து ஒரு செய்தி உலா வருகிறது.

இதை ஒரு திரையரங்க அபிஷியல் டுவிட்டர் ஹாண்டிலில் தெரிவித்துள்ளனர், இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கினர்.

ஆனால், தற்போது வரை தயாரிப்பாளர் போனிகபூர் இதை உறுதி செய்யவில்லை, அதனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும்.