சுஷாந்த் சிங் தற்கொலைக்கு.. கங்கனா ரணாவத்தின் வாக்குமூலம் என்ன?

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தற்கொலை செய்துக்கொண்டார். இவரது தற்கொலைக்கு மனஅழுத்தமே காரணம் என்று கூறப்பட்டது. இவரின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் இன்று வரை இவரது ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதுமட்டுமில்லாமல். வாரிசு நடிகர்களின் அழுத்தமும் காரணம் என்று பலரும் குற்றம்சாட்டி வந்தனர். இதற்கு சில பாலிவுட் நடிகர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கிடையே, நடிகை கங்கனா ரணாவத், சுஷாந்த் சிங் ராஜ்புத் மனநல ரீதியில் பலவீனமானவர் அல்ல என்றும், தகுதிவாய்ந்த அவரது படங்களும், அவரது நடிப்பும் எந்த விருதுகளாலும் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை விசாரித்து போலீசார், கங்கனா ரணாவத்தின் வாக்குமூலத்தை பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். தற்போது கங்கனா ரணாவத் மணாலியில் இருப்பதால், அவருக்கு தபால் மூலம் சம்மன் அனுப்பியுள்ளனர்.