தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் தங்களுக்கான இடத்தை பிடிக்க போராடுவார்கள். அந்த வகையில் ஹரிஸ் கல்யான் நீண்ட நாள் கழித்து பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் அந்த இடத்தை பிடித்தார்.
அதி தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான தாரள பிரபு படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, அதிலும் இப்படத்தின் பாடல்கள் செம்ம ஹிட்.
இந்நிலையில் ஹரிஸ் முதன் முறையாக சினிமாவில் அறிமுகமான படம் சிந்து சமவெளி. இந்த படம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
இந்த படம் குறித்து சமீபத்தில் ஹரிஸ், இந்த படம் விருப்பப்பட்டு தான் நடித்தேன், ஆனால், அந்த படம் வந்து 10 வருடம் ஆகிவிட்டது.
ஏன் இந்த படத்தில் நடித்தீர்கள் என்று மற்றவர்கள் கேட்கையில், என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை என்று ஹரிஸ் கூறியுள்ளார்.