தமிழ் திரையுலகில் முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா.
இவர் தற்போது சுதா கே. பிரசாத் இயக்கத்தில் சூரறை போற்று படத்தில் நடித்து முடித்து அப்படம் வெளிவர காத்திருக்கிறார்.
மேலும் இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் ஜி. வீ. பிரகாஷ் இசையில் வாடி வாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.
இதன்பின் ஹேரி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் அருவா எனும் படத்திலும் நடிக்க போகிறார் சூர்யா.
இந்நிலையில் இப்படங்களை எல்லாம் விட தற்போது தேசிய விருது வென்ற பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிக்க போகிறாராம்.
மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட போவதாகவும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் இப்படத்தை குறித்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.