பெங்களூருவை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் நீர் ஆதாரம் உள்ள புறம்போக்கு நிலத்தை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வியசாயிகளிடம் இருந்து ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்சம் கொடுத்து வாங்கிய புறம்போக்கு நிலத்தை, ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த கட்டுமான பணிகளை தொடங்க முடியாது, அவை நீர்நிலை புறம்போக்கு என வருவாய் துறை அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அண்ணா அனுப்பியுள்ளது.
இதனால் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் இடையே பிரச்னை வெடித்துள்ளது, மேலும் தற்போது உண்மைகள் ஒவ்வொன்றாக வெளியே வந்துகொண்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.