சேப்பங் கிழங்கு வறுவல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: 

மிளகாய்த் தூள் – ஒன்றரை டீஸ்பூன்

சேப்பங்கிழங்கு – கால் கிலோ

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

புளிக் கரைசல் – சிறிதளவு

அரிசி மாவு அல்லது சோள மாவு – 2 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

புளித் தண்ணீரில் சேப்பங்கிழங்கை உப்பு சேர்த்து முக்கால் பதத்திற்கு வேகவையுங்கள். அது ஆறியதும் தோலை நீக்கி வட்ட வடிவில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

அத்துடன், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், இஞ்சி – பூண்டு விழுது, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி ஊறவிடுங்கள். 15 நிமிடம் கழித்து தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு ஊறிய சேப்பங்கிழங்கைப் போட்டு இருபுறமும் முறுகலாக மாறியதும் எடுத்துவிடுங்கள்.

சேப்பங்கிழங்கு பிடிக்காதவர்கள்கூட இந்த வறுவலை விரும்பிச் சாப்பிடுவார்கள். பெருங்காயம், மிளகு சேர்த்தும் இதைச் செய்யலாம்.