டெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்

உலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான வசதிகளைக் கொண்ட மற்றுமொரு அப்பிளிக்கேஷனாக டெலிகிராம் காணப்படுகின்றது.

இந்த அப்பிளிக்கேஷனில் தற்போது புதிய மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி பயனர்கள் இனி 2GB வரையிலான கோப்புக்களை ஒரே தடவையில் பரிமாறக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ, படங்கள் மற்றும் ஆடியோக்கள் உட்பட மேலும் பல வகையான கோப்புக்களை இவ்வாறு பகிர்ந்துகொள்ள முடியும்.

இவ் வசதிகளைப் பெறுவதற்காக டெலிகிராம் 6.3.0 எனும் புதிய பதிப்பினை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.

மேலும் அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களில் இப் புதிய பதிப்பினை நிறுவிக்கொள்ள முடியும்.

இதேவேளை இதற்கு முன்னர் 1.5GB வரையிலான கோப்புக்களை மாத்திரமே பகிரக்கூடியதாக காணப்பட்டது.

அதேபோன்று வாட்ஸ் ஆப்பில் இன்றுவரை 16MB வரையிலான கோப்புக்களையே ஒரே தடவையில் அதிகபட்சமாக பகிர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.