ஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்நிலையில் குறித்த கைப்பேசி தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த வரிசையில் தற்போது iPhone 12 கைப்பேசிகளின் திரைகளின் படங்கள் வெளியாகியுள்ளன.
இவ் வருடம் அறிமுகமாகவுள்ள ஐபோன்கள் 5.4 அங்குல அளவு, 6.1 அங்குல அளவு மற்றும் 6.7 அங்குல அளவுடைய திரைகளை உடையதாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதேவேளை இக் கைப்பேசிகள் அனைத்தும் Apple A14 Bionic processor மற்றும் iOS 14 இயங்குதளம் என்பவற்றுடன் அறிமுகமாகவுள்ளன.
தவிர இவற்றில் 4 கமெராக்கள் தரப்படவுள்ளதுடன், LiDAR ஸ்கானரும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.